|
கந்தரநுபுதி
அருணகிரிநாதர்
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொல் புனைமா லைசிறந் திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்.
ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடுங் கயமாமுகனைச் செருவில்
சாடுந் தனியா னைசகோ தரனே.
உல்லா சநிரா குலயோ கவிதச்
சல்லா பவிநோ தனும்நீ யலையோ
எல்லா மறஎன் னைஇழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபு பதியே.
வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடம்
தானோ பொருளா வதுசண் முகனே.
வளைபட் டகைமா தொடுமக் களெனும்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியும்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே.
முகமா யைகளைந் திடவல் லபிரான்
முகமா றுமொழிந்துமொழிந் திலனே
ஆகமா யைமடந் தையர் என்ற யரும்
சுகமா யையுள்நின் றுதயங் குவதே.
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியார் அரவிந் தம்அரும் புமதோ
பணியா எனவள் ளிபதம் பணியும்
தணியா அதிமோ கதயா பரனே.
கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதுள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
அமரும் பதிகேள் அகமாம் எனுமிப்
பிரமங் கெடமெய்ப் பொருள்பே சியவா
குமரன் கிரிரா சகுமா ரிமகன்
சமரம் பொருதா னவநா சகனே.
மட்டூர் குழல்மங் கையர்மை யல்வலைப்
பட்டூ சல்படும் பரிசென் றொழிவேன்
தட்டூடறவேல் சயிலத் தெறியும்
நிட்டூர நிரா குலநிர்ப் பயனே.
கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்
தார்மார் பவலா ரிதலா ரியெனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.
கூகா எனஎன் கிளைகூ டிஅழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகா சலவே லவநா லுகவித்
தியாகா சுரலோ கசிகா மணியே.
செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இருசொல் லறஎன் றலுமே
அம்மா பொருள்ஒன் றும்அறிந் திலேனே.
முருகன் தனிவேல் முநிநம் குருவென்
றருள்கொண் டறியார் அறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின் றதுவே.
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநா சியொடும் செவியாம்
ஐவாய் வழிசெல் லும்அவா வினையே.
முருகன் குமரன் குகனென் றுமொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங் கவஎண் குணபஞ் சரனே.
பேரா சைஎனும் பிணியில் பிணிபட்
டோரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முதுசூர் படவேல் எறியும்
சூரா சுரலோக துரந் தரனே.
யாமோ தியகல் வியும்எம் மறிவும்
தாமே பெறவே லவர்தந் ததனால்
புமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
நாமே நடவீர் நடவீர் இனியே.
உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
பதிகா வலசூ ரபயங் கரனே.
வடிவுந் தனமும் மனமும் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வேல் அரசே
மிடியென் றொருபா விவெளிப் படினே.
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்
உரிதா உபதே சம்உணர்த் தியவா
விரிதா ரணவிக் கிரமவே ளிமையோர்
புரிதா ரகநா கபுரந் தரனே.
கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந்தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா சுரசூ ரவிபா டணனே.
காளைக் குமரே சன்எனக் கருதித்
தாளைப் பணியத் தவம்எய் தியவா
பாளைக் குழல்வள் ளிபதம் பணியும்
வேளைச் சுரபு பதிமே ருவையே.
அடியைக் குறியா தறியா மையினால்
முடியைக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமவேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபு தரனே.
கூர்வேல் விழிமங் கையர்கொங் கையிலே
சேர்வே னருள்சே ரவும்எண் ணுமதோ
சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும்
போர்வே லபுரந் தரபு பதியே.
மெய்யே எனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலே றியசே வகனே.
ஆதா ரம்இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒருசற் றும்நினைந் திலையே
வேதா கமஞா னவினோ தமனோ
தீதா சுரலோ கசிகா மணியே.
மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலே றியவா னவனே.
ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானா கியஎன் னைவிழுங் கிவெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே.
இல்லே எனுமா யையில்இட் டனைநீ
பொல்லேன் அறியா மைபொறுத் திலையே
மல்லே புரிபன் னிருவா குவில்என்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.
செவ்வா னுருவில் திகழ்வே லவன்அன்
றொவ்வா ததென உணர்வித் ததுதான்
அவ்வா றறிவார் அறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யெனஎன் னைவிதித் தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வாய் இனிநீ மயில்வா கனனே.
கலையே பதறிக் கதறித் தலையு
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரிவேடர் குலப்பிடி தோய்
மலையே! மலைகூ றிடுவா கையனே.
சிந்தா குலஇல் லொடுசெல் வமெனும்
விந்தா டவிஎன் றுவிடப் பெறுவேன்
மந்தா கினிதந் தவரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே.
சிங்கா ரமடந் தையர்தீ நெறிபோய்
மங்கா மல்எனக் குவரந் தருவாய்
சங்க்ரா மசிகா வலசண் முகனே
கங்கா நதிபா லக்ருபா கரனே.
விதிகா ணும்உடம் பைவிடா வினையேன்
கதிகா ணமலர்க் கழல்என் றருள்வாய்
மதிவா ணுதல்வள் ளியைஅல் லதுபின்
துதியா விரதா சுரபு பதியே.
நாதா குமரா நமஎன் றரனார்
ஓதாய் எனஓ தியதெப் பொருள்தான்
வேதா முதல்விண் ணவர்சூ டுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே.
திரிவாய் விடுவிக் ரமவேலி றையோன்
பரிவா ரம்எனும் பதமே வலையே
புரிவாய் மனனே! பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோ டும்அகந் தையையே.
ஆதா ளியைஒன் றறியே னைஅறத்
தீதா ளியைஆண் டதுசெப் புமதோ
கூதா ளகிரா தகுலிக் கிறைவா
வேதா ளகணம் புகழ்வே லவனே.
மாவேழ் சனனம் கெடமா யைவிடா
மூவே டனைஎன் றுமுடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங் கரதே சிகனே.
வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன்
மனையோ டுதியங் கிமயங் கிடவோ
சுனையோ டருவித் துறையோ டுபசுந்
தினையோ டிதனோ டுதிரிந் தவனே.
சாகா தெனையே சரணங்களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னோபதே சிகனே.
குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலும்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையும்அற் றதுவே.
துசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா! முருகா! நினதன் பருளால்
ஆசா நிகளம் துகளா யினபின்
பேசா அநுபு திபிறந் ததுவே.
சாடுந் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடும் சுரர்மா முடிவேத மும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே.
கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருள்ஈ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.
எந்தா யும்எனக் கருள்தந் தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே உமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.
ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா உலகம் குளிர்வித் தவனே.
அறிவென் றறநின் றறிவார் அறிவில்
பிறிவென் றறநின் றபிரான் அலையோ
செறிவென் றறவந் திருளே சிதைய
வெறிவென் றவரோ டுறும்வே லவனே.
தன்னந் தனிநின் றதுதான் அறிய
இன்னம் ஒருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா! நினைவார்
கின்னங் களையுங் கிருபைசூழ் சுடரே.
மதிகெட் டறவா டிமயங் கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதிபுத் திரஞா னசுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஔயாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
|