|
தான
தனதன தான
தனதன
தான தனதன
தனதன
பாதி
மதிநதி
போது
மணிசடை
நாத
ரருளிய
குமரேசா
பாகு
கனிமெழி
மாது
குறமகள்
பாதம்
வரடிய
மணவாளா
காது
மெருவிழி
காக
முறவருள்
மாய
னரிதிரு
மருகோனே
கால
னெனையணு
காம
லுனதிரு
காலில்
வழிபட
அருள்பாயே
ஆதி
யயனொடு
தேவர்
சுரருல
காளும்
வகையுறு
சிறைமீளா
ஆடு
மயிலினி
லேறி
யமரர்கள்
சூழ
வரவரும்
இளையோளே
சூத
மிகவளர்
சோலை
மருவுசு
வாமி
மலைதனில்
உறைவோனே
சூர
னுடலற
வாரி
சுவறிட
வேலை
விடவல
பெருமானே.
ஆகரமுமாகி
அதிபனுமாகி
அதிகமுமாகி
அகமாகி
ஆயனெனவாகி
அரியெனவாகி
அரனெனவாகி
அவர்மேலாய்
இகரமுகாகி
எவைகளுமாகி
இனிமையுமாகி
வருவோனே
இருநிலமீதில்
எளியனும்வாழ
எனதுமுன்னோடி
வரவேணும்
மகபதியாகி
மருவும்வலாரி
மகிழ்களிகூரும்
வடிவோனே
வனமுறைவேடன்
அருளியபுஜை
மகிழ்கதிர்காமம்
உடையோனே
செககணசேகு
தகுதிமிதோதி
திமியெனஆடும்
மயிலோனே
திருமலிவான
பழமுதிர்சோலை
மலைமிசைமேவு
பெருமானே.
பக்தியால்
யானுனைப்
பலகாலும்
பற்றியே
மாதிருப்
புகழ்பாடி
முத்தனா
மாறெனைப்
பெருவாழ்வின்
முத்தியே
சேர்வதற்
கருள்வாயே
உத்தமா
தானசற்
குணர்நேயா
ஒப்பிலா
மாமணிக்
கிரிவாசா
வித்தகா
ஞானசத்
தினிபாதா
வெற்றி
வேலாயுதப்
பெருமாளே.
துள்ளுமத
வேட்கை
கணையாலே
தெல்லை
நெடுநீலக்
கடலாலே
மெள்ளவரு
சோலைக்
குயிலாலே
மெய்யுருகு
மானைத்
தழுவாயே
தெள்ளுதமிழ்
பாடத்
தெளிவோனே
செய்ய
குமரேசத்
திறலோனே
வள்ளல்தெழு
ஞானக்
கடலோனே
வள்ளி
மணவாளப்
பெருமாளே.
தனதனன
தான
தனதனன
தான
தனதனன
தானத
தனதான
திருமகளு
லாவும்
இருபயமு
ராரி
திருமருக
நாமப்
பெருமாள்காண்
செகதலமும்
வானு
மிகுதிபெறு
பாடல்
தெரிதரு
குமாரப்
பெருமாள்காண்
மருவுமடி
யார்கள்
மனதில்
விளையாடு
மரகத
மயுரப்
பெருமாள்காண்
மணிதரளம்
வீசி
யணிஅ
ருவிசூழ
மருவு
கதிர்காமப்
பெருமாள்காண்
அருவரைகள்
நீறு
படஅசுரர்
மாள
அமர்பொருத
வீரப்
பெருமாள்காண்
அரவுபிறை
வாரி
விரவுசடை
வேணி
அமலர்குரு
நாதப்
பெருமாள்காண்
இருவினை
யலாத
தருவினை
விடாத
இமையவர்கு
லேசப்
பெருமாள்காண்
இலகு
சிலைவேடர்
கொடியின
திபார
இருதனவி
னோதப்
பெருமாளே.
தனனதன
தான தத்த
தனனதன
தானதத்த
தனனதன
தானதத்த
தனதான
சரணகம
லாலயத்தை
அரைநிமிட
நெரமட்டில்
தவமுறைதி
யானம்
வைக்க
அறியாத
சடகசட
மூடமட்டி
பவவினையி
லேசனித்த
தமியன்
மிடியால்
மயக்கம்
உறுவோனே
கருணைபுரி
யாதிருப்ப
தெனகுறையி
வேளை
செப்பு
கயிலைமலை
நாதர்பெற்ற
குமரோனே
கடகபுய
மீதிரத்ந
மணியணிபொன்
மாலைசெச்சை
கமழுமண
மார்கடப்பம்
அணிவோனே
தருணமிதை
யாமிகுத்த
கனமதுறு
நீள்சவுக்ய
சகலசெல்வ
யோகமிக்க
பெருவாழ்வு
தகைமைசிவ
ஞானமுத்தி
பரகதியு
நீகொடுத்து
உதவிபுரிய
வேணுநெய்த்த
வடிவேலா
அருணதள
பாதபத்ம
மதுநிதமு
மேதுதிக்க
அரியதமிழ்
தானளித்த
மயில்வீரா
அதிசயம
நேகமுற்ற
பழநிமலை
மீதுதித்த
அழகதிரு
வேரகத்தின்
முருகோனே.
தத்தத்
தன தத்தத்
தனதன
தனதான
முத்தைத்
தரு
பத்தித்
திருநகை
அத்திக்
கிறை
சத்திச்
சரவண
முத்திக்
கொரு
வித்துக்
குருபர
எனவோம்
முக்கட்
பர
மற்குச்
சுருதியின்
முற்பட்
டது
கற்பித்
திருவரும்
முப்பத்
துமு
வர்க்கத்
தமரரும்
அடிபேணப்
பத்துத்
தலை
தத்தக்
கணைதெடு
ஒற்றைக்
கிரி
மத்தைப்
பொருதெரு
பட்டப்
பகல்
வட்டத்
திகிரியில்
இரவாகப்
பத்தற்
கிர
தத்தைக்
கடவிய
பச்சைப்
புயல்
மெச்சத்
தகுபொருள்
பட்சத்
தெடு
ரட்சித்
தருள்வதும்
ஒருநாளே
தித்தித்
தெய
வொத்தப்
பரிபுர
நிர்த்தப்
பதம்
வைத்துப்
பயிரவி
திக்கொட்கந
டிக்கக்
கழுகொடு
கழுதாடத்
திக்குப்
பரி
அட்டப்
பயிரவர்
தெக்குத்
தெகு
தெக்குத்
தெகுதெகு
சித்ரப்
பவு
ரிக்குத்
த்ரிகடக
எனவோதக்
கொத்துப்
பறை
கொட்டக்
களமிசை
குக்குக்
குகு
குக்குக்
குகுகுகு
குத்திப்
புதை
புக்குப்
பிடியென
முதுகூகை
கொட்புற்
றெழ
நட்பற்
றவுணரை
வெட்டிப்
பலி
யிட்டுக்
குலகிரி
குத்துப்
பட
வொத்துப்
பொரவல
பெருமாளே
சந்ததம்
பந்தத்
தெடராலே
சஞ்சலந்
துஞ்சித்
திரியாதே
தந்தனென்
றென்றுற்
றுனைநாளும்
கண்டுகொண்
டன்புற்
றிடுவேனோ
தந்தியின்
கொம்பைப்
புணர்வோனே
சங்கரன்
பங்கிற்
சிவைபாலா
செந்திலங்
கண்டிக்
கதிர்வேலா
தென்பரங்
குன்றிற்
பெருமாளே.
|