Your daily message board     

  Login
   
  Home
  Contents
  Page 1
  Page 2
  Page 3
  Page 4
  Page 5
  Page 6
  Page 7
  Page 8
  Page 9
  Page 10
  Page 11
  Page 12
  Page 13
  Page 14
  Page 15
  Page 16
  Page 17
  Page 18
  Page 19
  Page 20
  Page 21
  Page 22
  Page 23
  Page 24
  Page 25
  Page 26
  Page 27
  Page 28
  Page 29
  Page 30
  Page 31
  Page 32
  Page 33
  Page 34
   
   
   
   
   
   
   
   
   

 

 

பெரியபுராணம்
-சேக்கிழார் பெருமான்


உலகெலா முணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

கற்பனை கடந்தசோதி கருணையே யுருவமாகி
அற்துபுதக் கோலநீடி அருமறைச்சிரத் தின்மேலாம்
சிற்பரவி யோமமாகும்திருச் சிற்றம்பலத் துள்நின்று
பொற்புடன்நடம் செய்கின்ற புங்கழல் போற்றிபோற்றி


ஆதியாய் நடுவும்ஆகி அளவிலா அளவும்ஆகிச்
சோதியாய் உணர்வும்ஆகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏகம்ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம்போற்றி போற்றி.


ஐந்துபே ரறிவும்கண் களேகொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக்குண மொருமூன்றும் திருந்து சாத்துவிக மேஆக
இந்துவாழ் சடையான் ஆடும்ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்பவெள்ளத் துள்திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

தெண்ணிலா மலர்ந்தவேணி யாய்உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்தபிறவியேஎனக்கு வாலிதாம் இன்பம்ஆம் என்று
கண்ணில் ஆனந்தஅரு விநீர்சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடிஅறி வரும்பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.


இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல்உன் னையென்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டுநான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுஉன் அடியின்கீழ் இருக்க வென்றார்.


மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
  வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
   தென்னர் குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளி னாலே
   இருந்ததமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
    போற்றுவார் கழல்எம்மால் போற்ற லாமே.

 

திருப்புகழ்
(அருணகிரிநாதர்)

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
  ஒண்கடலிற் றேனமுதத் துணர்வுறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
  என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
  தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
  ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.




தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதன


கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

 

எதிரி லாத பத்தி தனைமேவி
இனிய தாள்ணி னைப்பை யிருபோதும்
இதய வாரி திக்கு ளுறவாகி
எனது ளேசி றக்க அருள்வாயே
கதிர் காம வெற்பி லுறைவோனே
கனக மேரு மொத்த புயவீரா
மதுர வாணி யுற்ற கழலோனே
வழுதி கூனி மிர்த்த பெருமாளே.

 

ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே
சருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும்அடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்தமுகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீஅருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே.




தான தந்தன தானான தானன தனதான


நாத விந்துக லாதீந மோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீந மோநம வெகுகோடி


நாம சம்புகு மாராந மோநம
போக அந்தரி பாலாந மோநம
நாம பந்தம யுரா நமோ நம பரசூரர்

சேத தண்டவி நோதாந மோநம
கீத கிண்கிணி பாதாந மோநம
தீர சம்ப்ரம வீராந மோநம கிரிராஜ


தீப மங்கள ஜோதிந மோநம
துய அம்பல லீலாந மோநம
தேவ குஞ்சரி பாகாந மோநம அருள்தாராய்


<த லும்பல கோபால புஜையும்
ஓத லுங்குண ஆசார நீதியும்
<ர முங்குரு சீர்பாத சேவையும் மறவாத

ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதேம னோகர
ராஜ கெம்பீர நாடாளு நாயக வயலுரா


ஆதரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடேமுன் ளாளினில்
ஆடல் வெம்பரி மீதேறிய மாகயி லையிலேகி

ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவுர்ந னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.

 

© 2003 3WSERVES,  All rights reserved.