Your daily message board     

  Login
   
  Home
  Contents
  Page 1
  Page 2
  Page 3
  Page 4
  Page 5
  Page 6
  Page 7
  Page 8
  Page 9
  Page 10
  Page 11
  Page 12
  Page 13
  Page 14
  Page 15
  Page 16
  Page 17
  Page 18
  Page 19
  Page 20
  Page 21
  Page 22
  Page 23
  Page 24
  Page 25
  Page 26
  Page 27
  Page 28
  Page 29
  Page 30
  Page 31
  Page 32
  Page 33
  Page 34
   
   
   
   
   
   
   
   
   

 

 

திருமந்திரம்
(திருமூலர்)

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலு மெயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றனே.


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினெ.

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.


பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவஞ் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.


யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி சென்றங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரனடி செய்து நிறைந்து நின்றானே.


யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
துன்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.

திருமுருகாற்றுப்படை

குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர்தடிந்தாய்!
புன்தலைய புதப் பொருபடையாய்! - என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறுர்ந்தான் ஏறே!
உளையாய் என்உள்ளத் துறை.

குன்ற மெறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங்கு அமரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்- வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.


முன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில் வேல்சூர்தடிந்த கொற்றவா! - பின்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.


உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான்பின் செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தி வாழ்வே.


அஞ்சு முகந்தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் -நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்றுஓதுவார் முன்.


முருகனே! செந்தி முதல்வனே! மாயோன 

மருகனே! ரூடவ்சன் மகனே! - ஒருகைமுகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.

காக்கக் கடவியநீ காவா திருந் தக்கால்
ஆர்க்குப் பரமா அறுமுகவா!-புக்குங்
கடம்பா! முருகா! கதிர்வேலா நல்ல
விடங்காண் இரங்காய் எகில்.

பரங்குன்றில் பன்னிருகைக் கோமான் தன்பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையாய் நெஞ்சேஅணி முருகாற்றுப் படையைப்
புசையாய்க் கொண்டே புகல்.

நக்கீரர் தாம்உரைத்த நன்முருகாற்றுப் படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முக்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும்.


பதினோராந்திருமுறைப் பாடல்கள்


பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்.

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும்நெறி பணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத தெரியாடும் எம்மானார்க்கு
அன்பறா தென்னஞ் சவர்க்கு.


அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொரு ளுந்தானே விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளுந் தானே அவன்
                                                          (அற்புதத் திருவந்தாதி)


விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற்
கண்ணிற் பணிமின் கனிந்து.
                           (திருவிரட்டைமணிமாலை)

சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன்;
வந்தனை செய்ய தலை அமைத்தேன் கை தொழ அமைத்தேன்பந்தனை செய்வ தற்கு அன்பமைத்தேன் மெய் அரும் பமைத்தேன்
வெந்தவெண்; நீறணி<சற்; கிவையான் விதித்தனவே.
                            (பொன்வண்ணத்தந்தாதி)

நானே பிறந்து பயன் படைத் தேன் அயன் நாரணன்எம்
கோனே எனத்தில் லைஅம்பலத் தே நின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென் தீமை யெல் லாமறுத்து
ஊனே புகுந்தடி யேன்மனத் தேவந் துசந்திக் கவே.
                            (கோயில் நான்மணிமாலை)

 

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே.
                              (திருவேகம்பமாலை)

 

 

© 2003 3WSERVES,  All rights reserved.