மண்ணுலகத்
தினிற்
பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதில் முற்றுறக்
கண்ணுத லுடையதோர் களிற்றின் மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
தேவாரம்
திருஞானசம்பந்தர்
பண் - வியாழக்குறிஞ்சி
திருவலிவலம்
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
பண் -நட்டபாடை திருப்பிரமபுரம்
தோடுடைய செவியன் விடை ஏறியோர் துவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி புசியென் உள்ளங் கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமா புரமேவிய பெம்மா னிவனன்றே.
பண் - தக்கேசி
திருப்பழனம்
வேதமோதி வெண்ணுல்புண்டு வெள்ளை யெருதேறிப்
புதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்
நாதாஎனவும் நக்காஎனவும் நம்பா எனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.
பண்-காந்தாரம்
திருஆலவாய்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆல வாயான் திருநீறே.
வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆல வாயான் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
பண் -புறநீர்மை திருவாலவாய்
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாள்தொறும் பரவ
பொங்கழ லுருவன் புதநா யகனால் வேதமும் பொருட்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.
பண்-கொல்லி திருக்கழுமலம்
மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
பண்-கொல்லி
திருவாலவாயமானினேர்விழி
மாதராய்வழு
திக்குமா
பெருந்தேவிகேள்
பானல்வாயொரு
பாலனீங்கிவன்
என்றுநீபரி
வெய்திடேல்
ஆனை மாமலை யாதியாய இடங்களிற்பல
அல்லல்
சேர்னர்கட்கெளி
யேனலேன் திரு ஆலவாயரன் நிற்கவே.
பண்- செவ்வழி
திருக்கேதாரம்
தொண்டரஞ்சு களிறும் மடக்கிச் சுரும்பார் மலர்
இண்டை கட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்
வண்டு பாட மயிலாட மான்கன்று துள்ள வரிக்
கெண்டை பாயச் சுனை நீல மொட்டலருங் கேதாரமே.
பண்- இந்தளம் திருமருகல்
சடையாய் எனுமால் சரணீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ விவளுண் மெலிவே.
பண்- கௌசிகம் நமசிவாயப்பதிகம்
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.
பண்- கௌசிகம் பொது
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
பண் - காந்தாரபஞ்சமம் திருவாவடுதுறை
இடரினும் தளரினும் எனது றுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழு வேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவொஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
|